"உமாசங்கர் I.A.S. இதுவரை அதிகாரியாக சென்றவிடமெல்லாம் நல்ல பல சேவைகளை மக்களுக்கு அளித்தவர் என்பது வெள்ளிடை மலை. புதிய திட்டங்கள், செயல் முறைகள் என்று தனக்கென ஒரு பாணியில் நற்பணி செய்து வந்த அவருக்கு இன்றைய அரசு அளித்துவரும் "தண்டனை" , அதற்குரிய காரணம் எல்லாமே என் போன்ற ஒரு குடிமகனுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது.
நேர்மையான முறையில் வேலை பார்க்கும் ஒரு சில அதிகாரிகளையும் அதிகாரம் கொண்டும் அடக்க முயற்சிக்கும் அரசுக்கு தீவிரமான கண்டனங்கள்.. சுயலாபத்துக்காக அதிகாரிகளைப் பழிவாங்கும் போக்கினை இந்த அரசு கைவிட வேண்டும்.. துணிச்சலாக அரசை எதிர்த்து நிற்கும் உமாஷங்கரின் நேர்மையைப் பாராட்டுகிறோம்.."
அநீதிக்கு எதிரான உங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க நீங்கள் இங்கே கையெழுத்து இடலாம்.. வாருங்கள் நண்பர்களே.. பதிவர்கள் ஒன்றிணைந்து இதை சாதித்துக் காட்டுவோம்.
சேது சமுத்திர திட்டம்...சுற்றுப்புற சூழலை , சிறிது பாதித்தாலும்,பொதுவான பல பயன் கொண்டு ,( வேலை வாய்ப்பு ,பொருளாதார முன்னேற்றம் ) பெரும்பான்மையோர் வரவேற்கின்றனர்.... நானும் கூட...செய்தி ஹிந்துஸ்தான் டைம்ஸ் ,மற்றும் ஜூ வி.... சேது பாலத்தின் திட்ட மதிப்பு..2004 ஆம் வருடம்.. ரூபாய் 2400 கோடி... 2005 இல் திட்டம் துவங்கும் போது ( மணல் அள்ள ஆரம்பித்த பொழுது) , ஏறக்குறைய திட்ட மதிப்பு.. ரூபாய் 3500 கோடி , ஆனால் தட்போதைய நிலவரப்படி ரூபாய் 4000 கோடிகள் வரை , இத் திட்டத்தை முடிக்க தேவைப்படலாம்... ஆக பற்றாக்குறை... 1500 கோடிகள்....( அரசியல் வியாதிகளுக்கு ரொம்ப கம்மித்ான்) இதை எவ்வாறு ஈடு செய்வர்......( எல்லாம் நாம் வரி பணம் தாங்க) ? இந்நிலையில்... 01-10-07 அன்று தமிழக அரசு ,பொதுவேலை நிறுத்த, அழைப்பு அறிவிக்கின்றது... நல்ல வேளையாக நீதிமன்றம் தடை உத்தரவு போட்டது , நாட்டில் இன்றும் நீதி மன்றங்கள் , முறையாக , செயல்படுகின்றன என்பதை சுட்டியும் காட்டின... ஆனாலும் போது வேலைனிறுத்தத்ிக்கு பதில் உண்ணாவிரதம் ...என்று ஆனது... நடந்தது சற்று ஏறக்குறைய , வேலை நிறுத்தம் தான்... இதன் விளைவுகளை பார்ப்போம்.... முதலில் பொருளாதார ரீதியாக பார்ப்போம்... முதலில் கோவை மாவட்டம் திருப்பூர், சுமார் ரூபாய் 50000 கோடி வருட வியாபாரத்தில் ,ஒரு நாளைய இழப்பு சுமார் 100 கோடி,(ஆதாரம் : http://en.wikipedia.org/wiki/Economy_of_Tamil_Nadu) அடுத்து கரூர் சுமார் 13500 கோடி வருட வியாபாரத்தில் , ஒரு நாளைய இழப்பு 36 கோடி... இப்படி 29 மாவட்டங்களில் சுமாராக சுமாராக சொன்னாலே... இப்படி இது போக சுமாராக 62400000 பேர் கடைசி கணக்கு எடுப்பின் படி , இதில் குழந்தைகள், முதியவர்கள் , ஊனமுற்றோர் , மற்றும் நம்ம அரசியல்வாதிகளையும் கணக்கில் விட்டுவிட்டு( ஏன் என்றாள் அவர்கள் நாடு முன்னேற , கால, நேர , பாகுபாடு இன்றி தொண்டு செய்பவர்கள்) பாதி பேரை, கணக்கில் எடுத்துக்கொள்வோம்... சுமார் 30000000 மக்கள் உடைய மனித மணி நேரங்கள் ..... வீணடிக்கப்பட்டன.... இது சற்று ஏறக்குறையமலேய்சியாவின் மொத்த மக்களின் உழைப்புக்கு ஈடாகும்...ஜப்பானின் அரை பங்கு மக்களின் உழைப்பிட்கு ஈடாகும்....
இப்படியே நாம் பயணித்தால் ...விரைவில்....இந்தியா முன்னேறி விடும்..2020 இலக்கை அடைந்து விடலாம்....
இவர் தான் இமயங்கள் இணையும் ரெட்டசுழி படத்தின் துவக்க பாடலான பட்டாளம் பாருடா எனும் பாடலை எழுதி உள்ளார்.... பொதுவாக தமிழ் திரைப்படங்களில் சிறுவர்களுக்கான விடயங்கள் மிக குறைவு... ஆனால் வெயில் ,பசங்க படங்கள் விதிவிலக்கானவை.. இந்த பாடலை கேட்டும் போது திரையாக்கம் எப்படி இருக்கும் என்று யூகிக்க முடிகிறது...
மற்றுமொரு சிறுவர்..கொண்டாட்டத்திற்கான , அழகான பாடல்...
கேட்கையில் வேறோரு உலகில் நான் பயணிப்பதை போல் உணர்கிறேன், இசை (piper ) போல ஒருவகையான் மேறகத்திய சாயலை கொண்டுள்ளது...
கார்த்திக் ராஜாவின் உழைப்பு .... வீண்போகவில்லை... ராகாவில் முதல் 10 இடங்களில் முதலிடத்தில் உள்ளது.....
நம் பக்கத்தில் இருந்து மேலும் ஒருவர்...மிக்க மகிழ்ச்சியாக உள்ளது....!
மிக எளிமையான..மனிதர்...அவர்தம் வாழ்வில் வெற்றி மேல் வெற்றி பெற
நம்ம அனைத்து சொந்தங்களுக்கும்....வருகிற 22-03-10, அன்று அருள்மிகு கொண்டாத்தம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ,நீர் மோர் மற்றும் பானக்கம் ,ஊற்றுவதால், தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு
அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ...
இன்பம் துவக்கி.... இல்லம் ,உள்ளம் ... நிறைந்த மகிழ்வை ,
வெண் கதிர்கோன்.... அருளட்டும் .....
கடந்த வருட நினைவுகளின் தொடர்ச்சி... கடந்த வருடம் ....புதிதாய் புதிய நண்பர்கள் பலருக்கும் , எனக்கும் நட்பெனும் ஜனனம் கொடுத்த ஜனவரி .... தலைவர்வெயிலானுக்கு மின்னஞ்சல் அனுப்பியதன் விளைவாக ,செயலாளர் அமுக்கினார் ,பொருளாளர் ஈரவெங்காயமும் ,மற்றும் ராமன்குட்டியும் .. அப்புறமாக அண்ணனும் , அன்பின் முரளியும் அறிமுகமாகி வருடமாகின்றது ....
முதல் பதிவர் சந்திப்பு பிரபல பதிவர் அதிஷா , அவரின் சகோதரி திருமணத்தில் நடந்தது , அங்கு தான் அண்ணாச்சியையும், சஞ்சய்காந்தியையும் , அதிஷாவையும் , மட்டுமல்ல தலையையும் , செயலையும் முதன் முதலில் சந்தித்தேன் .....
அவரவர் விருப்பங்களைச் சொன்னால், விரைவில் சந்திக்கலாம்.
முரளி,
கடலையூர் செல்வம் மின்னஞ்சல் முகவரியையும் இதோடு சேர்த்து விடுங்கள்.
பரிசல்,
தமிழ் உதயா முகவரி........
வேறு யாராவது திருப்பூரார்கள் இருந்தால் அவர்களையும் இந்த மின்னஞ்சலில் சேருங்கள்.
சந்திக்கலாம் விரைவில்...... அன்புடன், ☼ வெயிலான்
இதற்கு அப்புறம் எழுத....பொதுகூட்டம் கூட்டனும்...,இப்படியான பதிவர் உலகத்தில்,, நானும்...விழுந்தேன்....... இத்தகைய வியத்தகு நண்பர்களை தந்த காலமெனும் ,ஓடத்திற்கு ஓராயிரம் நன்றி.....
நானும் சீரியஸா நிறைய எழுத நினைகின்றேன் முடியல.... அதனால்...
2010 நான் மிக எதிர்பார்க்கும் படம் , தமிழ்படம்... ஆமாங்க... தயாநிதி அழகிரி தயாரிக்கும் தமிழ்படம்... இயக்குனர் அமுதன்.....
அது பற்றி தொலைகாட்சியில் வந்த நேர்காணல்....
ப்டம் தான் , நல்ல காமெடியா இருக்கும்னு , பார்த்தா? நேர்காணல் அதவிட , காமெடி போங்க....
சிவா , தயாநிதி அழகிரிகிட்ட கேட்குறாரு.... எதனால இந்த படத்தை தயாரிக்கணும்னு நினைசீங்கன்னு....
அதுக்கு அவர் என்ன பதில் சொல்லி இருப்பார்ன்னு நினைகிறீர்கள்...?
என்னை மதுரைக்கு தூக்கிடு போய்..மிரட்டி படம் எடுக்க சொன்னாங்கன்னு...!
மனுசன் ரியலி , சிம்பிள்...அதான் ... எனக்கு அவரை பிடித்தது... *************************************************************************** பின்னலூருக்கு வருகை புரிந்த அண்ணன் திரு,தாமிராவோடு ..... கலந்துரையாட சந்தர்ப்பம் கிடைத்தது.... அதுவும் அவதாரை மிஸ் பண்ணி... சாரி முரளி....
மிக மிக அழகான , மாலைபொழுதாக ...இனிமையா (ABSOLUTE) இருந்தது.... ஈரோட்டு மாப்பிள்ளைகள் கார்த்தியும்.. (boobs)அதாங்க பூபதியும்...ஈரோட்டு சிங்கம் வால்பையனும்...கலந்து சிறப்பித்தார்கள்.....மேலும் திருபூரில் இருந்து இளைய இளவல்...இம்சித்தார்....
மகிழ்வான..நிறைவான தருணம்.... யாதனில் நண்பர்களுடன் உண்ணும் விருந்து... விகடன்ல மதன் சொல்லி இருக்கிறாரு... அதன் படியே..மிக மிக நிறைவான , மகிழ்வான தருணம்.. இது...
சரி பொங்கல் அதுவுமா... பேரரசன்னு பெயரை வச்சுகிட்டு சும்மா , இருந்தா எப்படி...
சாம்ராஜ்யத்தை சுத்தி பார்க்க போறேன்... அதுவும் பறக்கும் ஒத்த கொம்பு குதிரையில்..(unicorn) கும்பகோணம், ஜெயம் கொண்டம்(கங்கை கொண்ட சோழபுரம்) அப்புறமா தரணி புகழும் ..பெரிய கோவில்னு பெரிய பட்டியல்... வெற்றிகரமா வந்து மிச்சம் சொல்லுறேன்..... நண்பர்கள் தொடர்புக்கு... 98947 83597
இராஜ ராஜ சோழனை பற்றி என்னுள் ,ஆர்வம் எழ காரணம் , யாதெனில், 1. முதல் முறையாக என்னுடய 9 அல்லது 10 வயதில் நாங்கள் சென்ற சுற்றுலா , என் தந்தை, தாய் நான் ஆகியோர், சென்ற என்
நினைவில் உள்ள முதல் பயணம் , அதில் நாங்கள் , வேளாங்கண்ணி , நாகூர் , தஞ்சாவூர் , மற்றும் சில ஊர்கள் , சென்றோம் , ஆனால் இந்த மூன்று
ஊர்கள் மட்டுமே என் நினைவில் , இன்னும் நீடிக்கின்றது, ஏனென்றால் , முதன் முதலாக நான் பார்த்த தர்கா , நாகூர் தான் , எங்கள் ஊரில் , தர்கா
இல்லை , இன்றும் கூட, அடுத்ததாக வேளாங்கண்ணி , இங்குதான் என் தந்தை , எனக்கு மேரி மாதா , உருவம் , கொண்ட புனிதநீர் , குடுவையை ,
வாங்கி தந்தார்கள் , அக்குடுவை என்னை மிகவும் ஈர்த்தது , அந்த குடுவையை , என் கரங்களை , விட்டு விலகாமல் , வைத்திருந்தேன் , அடுத்து தஞ்சாவூர் , சென்றோம் , ஏற்கனவே , அக்கோவிலின் சிறப்பை ,( நிழல் தரையில் விழாதது) ஆசிரியர் , கூறி உள்ளமையினாலும், அங்கு உள்ள பெரிய , நந்தியும் , லிங்கமும் , வியப்பை உருவாக்கியது , கடைசியாக கோவிலை விட்டு வெளியே , வரும் போது , சிறுநீர் கழிப்பதட்காக , மேரி மாதா சிலையை ,முன் உள்ள மண்டபத்தில் , சிறு பூவாலை கைக்குட்டை கொண்டு மூடி வைத்து விட்டு ,( ஞாபகம் ) வந்து பார்த்தால் , மாதாவை காணவில்லை ,அங்கேயே நான் அழுது , ( கொஞ்சம் பிடிவாதம் அதிகம் ) புரண்டு , அழுகையோடே திருச்சி வந்தது... இங்கு உண்டான ஈர்ப்பு ,
2. பின்னர் திருப்பூரில் , சுய தொழில் , செய்த பொழுது , உபய நேரத்தை , கழிக்க , பூங்கா சாலை நூலகத்தில் , படிக்க செல்லும் பொழுது , ராஜ ராஜ சோழன் ,பற்றிய புத்தகங்களையே, அதிகம் படிக்க வைத்தது , அதில் இருந்து , அவரது ஆட்சி முறை , நிர்வாகம், போன்றவை பெரும் , வியப்பையும் , அதிக ஈடுபாட்டையும் , உருவாக்கியது , அதில் பலவற்றை , பிரதி , எடுத்து வைக்கும் , அளவிட்கு.....
3. ராஜ ராஜன் , பற்றிய விவரங்களை , பணியின் ஊடே , அவ்வப்போது சேகரித்து வந்தேன், அப்பொழுதுதான், என் வசிப்பிடத்தில் , அருகில் வசிக்கும் , அம்மா ,அக்காவை எப்படியும் 50 அதிகம் ,இருக்கும், அவர்கள் பெயர் , எனக்கு தெரியாது , நான் அம்மா என்றே அழைப்பேன் , அவர்களுக்கு குழந்தைகள் , இல்லை ஆதலால் , என் மீது , அன்பு கொண்டாடுவார்கள் , நல்ல ,நல்ல அறிவுரைகளையும் ,கூறுவார்கள் , அவர்கள் நீண்ட நாட்களாக , கல்கி இதழில் , வெளிவந்த பொன்னியின் செல்வனை , ஒவ்வொரு பக்கமாக சேகரித்து , வைத்து , பாகம் , பாகமாய் , தொகுத்து , வைத்திருந்ததை, எனக்கு தந்தார்கள் , கண்டிப்பாக , எந்தவொரு ,பரிசோ, அதகு ஈடாகாது... பொன்னியின் செல்வன் என்னுள் , இடம்பெற்றான்..